Skip to main content

'மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாட்டில் எந்த அவசியமும் இல்லை'-புள்ளி விவரங்களோடு டேக் செய்த அன்பில் மகேஷ்

Published on 12/03/2025 | Edited on 12/03/2025
'There is no need for a three-language policy in Tamil Nadu' - Anbil Mahesh tagged the Union Minister with the details

நேற்று முன்தினம் (10/03/2025) நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. 'மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது' என திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழி நடத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (un democratic, uncivilized) என இருமுறை குறிப்பிட்டார். மேலும், ''சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழிதான் கூறவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

திமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையை மத்திய அமைச்சர் திரும்பப் பெற்றார். பிரதானின் பேச்சுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது பல இடங்களில் அவரது உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன.

'There is no need for a three-language policy in Tamil Nadu' - Anbil Mahesh tagged the Union Minister with the details

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதனை 'டேக்' செய்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 1635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி கொள்கையில் படிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 1.09 கோடி மாணவர்கள்  58,779  பள்ளிகளில் மாநில  திட்ட கல்வியை தேர்வு செய்து பயின்று வருகின்றனர். எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்றாவது மொழிக்கான எந்த ஒரு அவசியமும் தமிழ்நாட்டில் இல்லை' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்