Skip to main content

துணிக்கடையில் திருட்டு; அதிர்ச்சி கொடுத்த சிசிடிவி காட்சி

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Theft at a clothing store; CCTV footage goes viral

மதுரையில் துணிக்கடை ஒன்றில் கல்லாப்பெட்டியில் இருந்து  சிறுவன் ஒருவன் 62,000 ரூபாய் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் அஜித் என்பவர் துணிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து சிறுவன் ஒருவன் பணப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் சென்றான். கடையில் பணம் திருடப்பட்டதாக காவல்துறையில் கடை நிர்வாகத்தினர் புகார் அளித்திருந்தனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது சிறுவன் ஒருவன் திருடியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் ஒருவன் பணப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்லும் அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வெறித்தனமாக கடித்துக் குதறிய தெருநாய்; கல்லூரி மாணவி காயம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
 A stray dog ​​that bit madly; College girl injured

வளர்ப்பு நாய் மற்றும் தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளும், வீடியோ காட்சிகளும் அவ்வப்போது இணையத் தளங்களில் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில் அண்மையாகவே தெருநாய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்குதலுக்கு உள்ளாகும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஒரு புறம் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பழனி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவரை தெரு நாய் ஒன்று வெறித்தனமாக கடித்து குதறும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஹேமா. ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த ஹேமா, பழனி  தீயணைப்பு நிலையம் அருகே பட்டப்பகலில் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். பரபரப்பான சாலைப் பகுதியில் அங்கு வந்த தெரு நாய் ஒன்று ஹேமாவை கை மற்றும் கால்களை வெறித்தனமாக கடித்துக் குதறியது. அக்கம்பக்கத்தில் மனிதர்கள் இருந்தபோதிலும் தெரு நாய் ஒன்று கல்லூரி மாணவியைக் கடித்துக் பரபரப்பு ஏற்படுத்தியது.

மாணவி ரோட்டிலேயே சுருண்டு விழுந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் நாயை துரத்தி அடித்தனர். உடனடியாக மீட்கப்பட்ட மாணவி ஹேமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மதுரையை உலுக்கிய சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Ex-wife of IAS officer lost their life in case of child abduction

மதுரையைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - மைதிலி தம்பதியினர். இவர்களது மகன் மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவர், பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி பள்ளிக்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டி இருவரையும் மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்கள் கொண்டு தாக்கி கடத்தி சென்றது. 

இதனையடுத்து அந்தக் கும்பலை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் மைதிலி தம்பதியினரை தொடர்புக்கொண்டு, ரூ.2 கோடி பணம் கொடுத்தால் உன் மகனை உயிருடன் ஒப்படைப்பதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மைதிலி உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவன் மற்றும் ஆட்டோ ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டனர். மேலும் சிறுவனை கடத்தியது தொடர்பாக முன்னாள் காவலர் செந்தில் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். செந்தில் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் அவர் உயர் அதிகாரிகளால் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செந்தில் குமார் போலீசாரிடம் அளித்த தகவலின்படி தென்காசியைச் சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையைச் சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், சிறுவன் கடத்தப்பட்டதில் தூத்துகுடியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி சூர்யா மற்றும் பிரபல ரௌடி மகாராஜா ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுப்பிடித்தனர். 

இதனைத் தொடர்ந்து வழக்கின் முக்கிய குற்றவாளியான சூர்யா மற்றும் மகாராஜா இருவரையும் பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் குஜராத்தில் தங்கிருந்த சூர்யா தற்கொலை செய்துக்கொண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் தாய் தனது மகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டதை உறுதி செய்யுமாறும், மேலும் தனது மகளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனிடையே, தலைமறைவாக உள்ள ரௌடி மகாராஜா பிடிபடாத நிலையில் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மதுரையை உலுக்கிய இந்தச் சமபவத்தில் முக்கிய குற்றவாளி சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.