காலாவை பேஸ்புக்கில் லைவ் செய்த தம்பிக்கு நன்றி என இயக்குநர் பா.ரஞ்சித் சிரித்தப்படி தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவுப்புக்கு பின் பெரும் எதிர்ப்புகளுக்கும், எதிர்ப்பார்ப்புகளுக்கும் மத்தியில் காலா திரைப்படம் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர் காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் காலா திரைப்படத்தை தனது மனைவியுடன் பார்க்க வந்த இயக்குநர் பா.ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்த போது,
காலா படத்தின் 2ஆம் பாகம் எடுக்கும் திட்டம் எதுவுமில்லை, என்னுடைய வாழ்க்கை அரசியலாகத்தான் இருக்கிறது. அதனால் நான் எது பேசினாலும் அரசியலாகத்தான் மாறும்.
ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்சனைக்காக எடுக்கப்பட்ட படம். படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. காலாவை பேஸ்புக்கில் லைவ் செய்த தம்பிக்கு நன்றி என அவர் சிரித்துக்கொண்டே கூறினார்.