Thangamthennarasu appointed Finance Department; Official notification

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட்டது.

Advertisment

அதன்படிதமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும்மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்பதாகவும்அறிவிக்கப்பட்டநிலையில்,சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மற்றும்தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்பொழுது புதியதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவிற்கான துறை மற்றும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வெளியான தகவலின்படி டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்குமனோ தங்கராஜ் வகித்து வந்த தகவல் தொழில்நுட்பத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் வகித்து பால்வளத்துறை மனோ தங்கராஜுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாகஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment