
142 ஆண்டுகளுக்குப் பிறகு அதிசய பாம்பான தங்ககவசவாலன் என்ற பாம்பு வெளிவந்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சுல்தான்புத்தேரி என்ற பகுதிக்கு அருகே உள்ளது பெம்பரமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1400 அடி உயரத்தில் உள்ள இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் மண்ணை தோண்டி கொண்டிருந்தனர். அப்பொழுது வித்தியாசமான பாம்பு ஒன்று மண்ணுக்குள் இருந்து வெளியே வந்தது. பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்த பாம்பு குறித்து அங்கு இருந்தவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வந்த வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து ஆய்வு செய்தனர். பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் அது தங்ககவச வாலன் என்ற அபூர்வ, அரிய ரக பாம்பு என்பது தெரியவந்தது. கடந்த 1780 ஆம் ஆண்டு இதே போன்ற பாம்பு ஒன்று பிடிபட்டது.இதனை ஆங்கிலேயர்கள் கோல்டன் ஷீல்டு டெய்ல் என்று அழைப்பார்களாம். மர்மங்கள் நிறைந்த ஷீல்டு டெய்ல் எனும் பாம்பு குடும்பத்தைச் சேர்ந்தது இந்த பாம்பு. சூரிய வெளிச்சத்தில் இந்த பாம்பு தங்க கவசம் அணிந்தது போல் ஜொலிக்கும் என்பதால் இதற்கு பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கேரளாவின் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி அதிசயிக்க வைத்த நிலையில் மீண்டும் கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு அதிசய நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)