தாம்பரம் - செங்கோட்டை அந்தோதையா குறைந்த கட்டண சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து திங்கள் மற்றும் புதன் கிழமைகளிலும், செங்கோட்டையில் இருந்து செவ்வாய் மற்றும் வியாழகிழமையிலும் இயக்கப்படுகிறது.

low cost train

தாம்பரத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை செல்லும். இதேபோல் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வரும். இந்த ரயில் பயணத்திற்கான கட்டணம் ரூபாய் 200 மட்டும். முன்பதிவு இல்லை.

Advertisment

செங்கல்பட்டு, மதுராந்தகம், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புகோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செல்வதால் இந்த ஊர்களுக்கு செல்பவர்களும் குறைந்த கட்டண ரெயிலை பயன்படுத்தி செல்லலாம்.

Advertisment

பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்நு விட்ட நிலையில் இதுபோன்ற ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் பயண திட்டங்களை அமைத்து பொதுமக்கள் ரெயில் பயணங்களை தொடங்கலாம்.

அரவிந்த்