Published on 18/06/2022 | Edited on 18/06/2022
![Terrible in Trichy! Chain flush from the woman's neck entering the house during the day!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ytqaOHqYp3Rv3Nqu_VqTWAppN3u7Qcr0jx2E5vgVS0I/1655531917/sites/default/files/inline-images/poice-siren_10.jpg)
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சிராணி. இவரும், இவர் கணவரின் தாயாரும் வீட்டில் நேற்று மதியம் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, ஜான்சிராணியின் மாமியார் வெளியே சென்றுள்ளார். அந்தச்சமயத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டின் சுவர் ஏறிக் குதித்து வீட்டிற்குள் சென்று உறங்கிக்கொண்டிருந்த ஜான்சி ராணியின் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார். அதில், ஜான்சிராணி சுதாரித்துக்கொண்டு செயினை கையால் பிடித்துள்ளார். ஆனால், மர்ம நபர் செயினை அறுத்துக் கொண்டு கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜான்சிராணி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.