
கடலூர் மாவட்டம், வேப்பூரில் இயங்கிவரும் தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் இன்று காலை திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. தீப்பற்றி கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் 50 லட்சம் மதிப்பிலான புதிய இருசக்கர வாகனம், சர்வீஸுக்கு வந்த பழைய வாகனம், அலுவலக பயன்பாட்டிற்கு இருந்த கணினி, வரவேற்பறை போன்றவைகள் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்தத் தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டம் செய்து உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொழுந்துவிட்டு எரிந்த தீயை வேப்பூர் மற்றும் விருத்தாச்சலம் தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.