Terrible accident near Trichy .. Police looking for driver!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியிலிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு தண்டலை கிராமத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த லாரியில் செங்கல் இறக்கும் தொழிலாளர்கள் 6 பேர் பயணித்த நிலையில், அதில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயங்களுடன் ஐந்து பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்த முசிறி காவல்துறையினர், லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் துரைராஜ் என்பவரைத் தேடிவருகின்றனர்.

Advertisment