/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1001_98.jpg)
ஈரோடு நாடார்மேடு விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சலீம். இவரது மனைவி சபரித். இவர்களது மகன் சித்திக் (19). வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவர்கள் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சித்திக் வீட்டின் மூன்றாவது மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென சித்திக் மேலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடினார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது சித்திக் ரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை செய்தபோது சித்திக் இறந்துவிட்டதாகத்தெரிவித்தனர். இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்திக் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? எனத்தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)