/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_68.jpg)
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா கிடார குளம் கிராமத்தைச்சேர்ந்தவர் கோகுல்(18). இவர் நேற்று இரவு நாகர்கோவில் ரெயிலில் ஏறி கோயம்புத்தூருக்கு வந்து கொண்டிருந்தார். கோகுல் பொது பெட்டியில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் கோகுல் படிக்கட்டில் பயணம் செய்து வந்தார். இந்த ரெயில் இன்று காலை ஈரோடு ரெயில் நிலையம் வந்து பின்னர் சிறிது நேரத்தில் கிளம்ப தொடங்கியது.
அப்போது படிக்கட்டில் பயணம் செய்து வந்த கோகுல் தூக்கக்கலக்கத்தில் திடீரென ரெயிலில் இருந்து கீழே தவறி விழுந்தார். ரெயில் மெதுவாக சென்றதால் கோகுலுக்கு பெரிய அளவில் அடிபடவில்லை. இடுப்பு பகுதியில் வலி இருந்ததால் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)