Published on 28/10/2021 | Edited on 28/10/2021
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொத்து விவரங்கள் மற்றும் கடன் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது வழக்கமான நடைமுறைதான். அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகள் சட்டம் 1973- இன் படி விவரங்களைப் பெற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்து மற்றும் கடன் விவரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையை எடுக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.