vTeacher drowns in river

திருச்சி மாவட்டம், முசிறி அருகே, பெரியார் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (29). நாமக்கல்லில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் அவரது அண்ணன் உதயகுமாருடன் முசிறி காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, உதயகுமார் முன்னதாக குளித்துவிட்டு கிளம்பியுள்ளார்.

Advertisment

வெகு நேரம் ஆகியும் சரவணன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், உடனடியாக ஆற்றுக்கு வந்து சரவணன் குளித்த இடத்தில் பார்த்த போது, அங்கு துவைத்து வைத்திருந்த துணி மட்டும்தான் இருந்தது. சரவணனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உதயகுமார், முசிறி தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் சேர்ந்து காவிரி ஆற்றில் ஆசிரியர் சரவணனை 2 நாட்களாக தேடினர்.

Advertisment

இந்நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் சுடுகாட்டின் அருகே சரவணனின் உடல் ஆற்றில் கரை ஒதுங்கி இருந்ததை கண்டனர். அதனையடுத்து அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.