Skip to main content

ஆசிரியத் தம்பதியைத் தாக்கி 58 லட்சம் கொள்ளை.... சிக்கிய மாறுவேட மகா கொள்ளையர்கள்!

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

teacher couple 58 lakhs money incident police arrested the person

 

தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரைச் சேர்ந்த வயதான ஆசிரியத் தம்பதியர் அருணாச்சலம் ஜாய்சொர்ணதேவி. கடந்த ஜூன் 30- ஆம் தேதி அன்று இரவு தம்பதியர் வீட்டிலிருந்தபோது மங்கி குல்லா அணிந்த மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி 150 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள், 10 லட்சம் ரொக்கம் என 58 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மாவட்டத்தை அதிர வைத்தது. அதுகுறித்த செய்தி நக்கீரன் இணையத்திலும் வெளியாகியிருந்தது.

 

வழக்குப் பதிவு செய்யப்பட்டு தென்காசி எஸ்.பி.கிருஷ்ணராஜின் உத்தரவுப்படி, ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னரசு, இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான டீம்  குற்றவாளிகளைத் தேடினர். தெருமுனை மற்றும் வழியோர சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த தனிப்படை பாவூர்சத்திரம் அருகேயுள்ள சந்தனகுமார்பட்டி மாரியப்பனைப் பிடித்து விசாரணை செய்ததில், ஆசிரியர் அருணாச்சலம் தன் வீட்டிற்கு எதிரே 4 கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒரு கடையில் மாரியப்பன் வெல்டிங் பட்டறை வைத்திருந்தார். அதுசமயம் தம்பதியர் வீட்டில் தனியாக இருப்பதையும், நகைகள் பணம் உள்ளதையும் தெரிந்து கொண்டவர் திட்டமிட்டு தன் கூட்டாளிகளோடு கொள்ளையடித்துள்ளார். கொள்ளைப் பொருட்களை தேனியில் மறைத்துவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

teacher couple 58 lakhs money incident police arrested the person

 

இதையடுத்து தனிப்படையினர் கூட்டாளிகளான குமரி மாவட்டத்தின் முட்டத்தைச் சேர்ந்த ஜான்விமல் சதீஷ், சென்னை பச்சரைவாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கர், கமல்ராஜ், பூந்தமல்லி நசரத்பேட்டை வாஜாகத் அலி, தேனியைச் சேர்ந்த நல்லுசாமி உள்ளிட்ட 6 பேரைக் கைது செய்தனர். கொள்ளையடிக்கப்பட்டதில் தேனியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 48 பவுன், மூன்றரை லட்சம் பணம் மீட்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இதில் கொள்ளையடித்த பணத்தில் அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் வளமாக இருந்தது அவரைக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

பிரியாணி கடை உரிமையாளர் வழிமறித்து கொலை; போலீஸார் விசாரணை

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

Biryani shop owner incident for police investigation

 

கடலூரில் பிரியாணி கடை நடத்தி வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அந்தப் பகுதியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். இவர், நேற்று (26-10-23) இரவு வழக்கம் போல் வேலையை முடித்து தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கண்ணன் வந்த கொண்டிருந்த வாகனத்தை வழிமறித்துள்ளனர். மேலும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

தகவல் அறிந்த நெய்வேலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலமாகக் கிடந்த கண்ணனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த ஆகஸ்ட் மாதம் கண்ணனுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கண்ணன் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால், எதிர் தரப்பினர் கண்ணனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சைடிஷ்க்கான போராட்டம்; திக்குமுக்காடிய திருடர்கள்  

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

Thieves stole jewellery house nagai and went away after drinking alcohol there

 

ஆள் இல்லாத நேரத்தில் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை வைத்து மது அருந்திய சம்பவம் பொதுமக்கள் மத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள ஆய்மழை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சந்திரகலா. இந்த தம்பதி கடந்த 10ம் தேதியன்று தங்களது வீட்டைப் பூட்டிவிட்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து அன்றிரவு உறவினர் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

 

அப்போது, அவர்களது வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைரத் தோடுகள் உள்ளிட்ட பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இதையடுத்து, சந்திரகலாவின் வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உடனே அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சந்திரகலா, பதறியடித்துக்கொண்டு வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

அதுமட்டுமின்றி, கையில் மதுபாட்டிலோடு வந்த கொள்ளையர்கள், ஃப்ரிட்ஜில் இருந்த ஊறுகாயை சைட்டிஷ்ஷாக வைத்துக்கொண்டு, டம்ளர் மற்றும் சொம்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு சாவகாசமாக மது அருந்திவிட்டு அங்கிருந்த நகைகளைக் கூலாகத் திருடிச் சென்றுள்ளனர். மேலும், போலீஸ் தங்களை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக கைரேகை பதியாத அளவிற்குத் தண்ணீரால் துடைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர், இந்த திருட்டுச் சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சந்திரகலா புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்