தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் படி மாநகராட்சி அலுவலகங்களிலும், மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TAMILNADU VOTERS LIST RELEASED ELECTION COMMISSION

Advertisment

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் ஏதும் இருந்தால், ஜனவரி 22- ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் முகவரியில் திருத்தம் கோரிய விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பிப்ரவரி- 3 ஆம் தேதிக்குள் சரி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் பெயர், முகவரி திருத்தம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பிப்ரவரி 14- ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் அதிகாரிகள் கூறுகின்றன.

TAMILNADU VOTERS LIST RELEASED ELECTION COMMISSION

இதனிடையே சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் வெளியிட்டார். சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் ஜனவரி 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆணையாளர் தெரிவித்தார்.

Advertisment

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி திருத்தம் உள்ளிட்டவைகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்வதற்கான இணைய தள முகவரி: https://www.elections.tn.gov.in/Electoral_Services.aspx (அல்லது) இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி: https://nvsp.in/home ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி மக்கள் எளிதாக திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.