tamilnadu school education minister inspection for schools

Advertisment

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து பம்பரமாய் சுழன்று பணியாற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (13/06/2021) சேலம் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், ஸ்மார்ட் வகுப்புகளுக்கு தடையற்ற இணைய வசதி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஆசிரியா்களிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார். மேலும் மாவட்ட மைய நூலகத்தை பார்வையிட்டு பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.

tamilnadu school education minister inspection for schools

Advertisment

அதன்பிறகு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பள்ளிகளுக்கு தேவையான வசதிகளைத் தயக்கமின்றி எந்த நேரத்திலும் என்னிடம் கேட்கலாம். எனவே முன்வாருங்கள், வளர்ச்சிக்கானத் தேவையைப் பூர்த்தி செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.