புதியதாக உருவாக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களை வரும் 22- ஆம் தேதி முதல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி. அதன்படி தென்காசி மாவட்டத்தை நவம்பர் 22- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை நவம்பர் 27- ஆம் தேதி காலை 10.45 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தை நவம்பர் 28- ஆம் தேதி காலை 10.30 மணிக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தை நவம்பர் 28- ஆம் தேதி அன்று மதியம் 12.30 முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தை நவம்பர் 29- ஆம் தேதி மதியம் 12.15 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதனிடையே இன்று (19.11.209) மாலை 05.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிடுகிறார். புதிய மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களை தமிழக அரசு ஏற்கனவே நியமித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.