விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியான முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் வழக்கின் விசாரணையின் போது படத்திற்குக் கேரள உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இப்படிப் பல எதிர்ப்புகள் வந்தாலும் படம் அனைத்து மாநிலங்களிலும் திரையரங்கில் வெளியானது. ஆனால் தமிழகத்தில் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்ததும், மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தி கேரள ஸ்டோரி படம் திரையிடப்படாது என்று அறிவித்தன. இருப்பினும் ஒரு சில திரையரங்குகளில் படம் வெளியான நிலையில் ரசிகர்கள் யாரும் படம் பார்க்க வரவில்லை என்று கூறி படம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி படம் வெளியாவதற்கு முன்பு, பின்பு ஏகப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பிய இந்த படத்தை பாஜக மற்றும் வலது சாரிகள் தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் தி கேரள ஸ்டோரி படத்தை பார்த்துவிட்டு ஆதரவாக ட்விட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தி கேரளா ஸ்டோரி” படத்தைப் பார்த்தேன். ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி”எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தி கேரளா ஸ்டோரி” படத்தை பார்த்தேன்.
ஒரு மெல்லிய கொடூரமான யதார்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி.: ஆளுநர் ரவி@PMOIndia @HMOIndia @MIB_India @pibchennai @ANI @PTI_News— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) May 21, 2023