Published on 03/11/2020 | Edited on 03/11/2020
![tamilnadu governor bjp leader murugan meet at rajbhavan](http://image.nakkheeran.in/cdn/farfuture/0jZ-pb3owO00x6yz1-WQJmJPd0d0m9V1ei6ar74cTMc/1604382171/sites/default/files/inline-images/m1%20%283%29_0.jpg)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.
சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்கு எல்.முருகன் நன்றி கூறுகிறார். ஆளுநருடனான சந்திப்புக்கு பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எல்.முருகன் சந்திக்கவுள்ளார்.
பா.ஜ.க. தலைவருடன் பா.ஜ.க. துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா மற்றும் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.