நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் வேளையில், தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் (30.01.2023) உத்தமர் காந்தியடிகளின் 76வது நினைவு நாளையொட்டி காந்தியடிகளின் திருவுருவச் சிலை அருகில் வைக்கப்பட்டு இருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.