Published on 27/03/2020 | Edited on 27/03/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் வெளியே சுற்றுவோரைக் கண்காணிக்க ஆறு ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளது. காவல்துறை பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தாமரைக்கண்ணன், சேஷசாயி, சீமா அகர்வால் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.