/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/QRG_208.jpg)
தமிழகத்தில் மேலும் 2,312 பேருக்கு கரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 25,31,118 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 1,48,778 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,312 ஆக உள்ளது. கரோனாவால் மேலும் 46 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,652 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 28 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 29,230 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து மேலும் 2,986 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,68,236 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் 56- ஆவது நாளாக ஒருநாள் கரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)