தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு வாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் ஜூன் 28- ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும். மூன்று வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வகை 2-ல் உள்ள 23 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்? என்பது குறித்து பார்ப்போம்!
தமிழகத்தில் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளனர்.
தனியாக செயல்படும் மளிகை, பல சரக்குகள், காய்கறி, மீன், இறைச்சிக் கடைகளுக்கு காலை 06.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, பூ, பழம் விற்கும் நடைபாதைக் கடைகளும் காலை 06.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் அடுமனைகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை செயல்படலாம்.
மின் வணிக சேவை நிறுவனங்கள், இனிப்பு, கார வகை விற்பனைக் கடைகள் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்கள்; இதர அரசு அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 33% பணியாளர்களுடன் செயல்படலாம்.
மின் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மிதிவண்டி, இரு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேஷனரி, காலணி கடைகள், கண் கண்ணாடி விற்பனை கடைகள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை, பழுது நீக்கும் கடைகள், மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் கடைகள் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரீசியன்ஸ், பிளம்பர் போன்றவர்கள் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இ- பதிவுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செல்ஃபோன்கள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ- பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவர்.
வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகளும் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகள் நாளை (21/06/2021) முதல் அமலுக்கு வருகிறது.