Skip to main content

தமிழக கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு பரிசீலனை- பல இடங்களில் கோஷ்டி மோதல்

Published on 28/03/2018 | Edited on 28/03/2018

தமிழகங்களில் பல்வேறு இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு பரசீலனையின்போது அதிமுக, திமுக, அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நாகை மாவட்டம்- மயிலாடுதுறையில்  கூட்டுறவு சங்கத் தேர்தலில்  திமுகவிற்கு  ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாக அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

tamilnadu

 

விழுப்பரம்- சங்கராபுரம் கூட்டுறவு தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு துணைபோவதாக கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

அதேபோல் சிவகங்கை மாவட்டம் -கன்னங்குடி கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே  தேர்தல் அலுவலர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக  மோதல் ஏற்பட்டது.  

 

tamilnadu

 

 திருவாரூர்- திருத்துறைப்பூண்டி, கன்னியாகுமரி -தோப்பூர், ஈரோடு-வெள்ளி திருப்பூர் போல பல இடங்களில் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோதல் நடைபெற்றதால் பரபரப்பு நிலவிவருகிறது   

சார்ந்த செய்திகள்