jk

தமிழக முதல்வர் பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப்பேசினார்.

Advertisment

கரோனா தொடர்பான நடவடிக்கை பற்றி ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில் அவர்கள் இருவரும் தற்போது மீண்டும் சந்தித்துள்ளனர். மேலும், வரும் செப்டம்பர் 14- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பின் போதுதலைமைச் செயலர் சண்முகம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.