பேச்சுவார்த்தைக்காக தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.
தமிழக மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை மாமல்லப்புரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. பேச்சுவார்த்தை நடப்பதன் மூலம் தமிழகத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது. மேலும் நிகழ்ச்சிக்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சீனா மற்றும் இந்தியா இடையே கலாச்சாரம் மற்றும் வணிகம் ரீதியான தொடர்பு இருந்தது. பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய மாமல்லப்புரத்தை தேர்வு செய்தது பொருத்தமானது என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.