![mk1](http://image.nakkheeran.in/cdn/farfuture/_NCBirKTV6yJsn_zdpOsCdajPABVUDmXpnw6kinUZM8/1623251885/sites/default/files/2021-06/mkg8_1.jpg)
![mk2](http://image.nakkheeran.in/cdn/farfuture/6VWI7dby_eTSd_ub80rqYrNzwppOWijHo1hQXTqc4N8/1623251885/sites/default/files/2021-06/mkg5.jpg)
![mk3](http://image.nakkheeran.in/cdn/farfuture/6mp0rcQIsd_cEXIAqKNrgimPW2RxVPTg8J8XAyOPLO8/1623251885/sites/default/files/2021-06/mks333_4.jpg)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (09/06/2021) மாலை 05.00 மணிக்கு நேரில் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தி.மு.க. அரசுப் பொறுப்பேற்ற பிறகு ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்து கலந்தாலோசிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (09/06/2021) தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது தமிழக ஆளுநர், கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின் போது நீர்வளத்துறை அமைச்சரும், அவை முனைவருமான துரைமுருகன், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தமிழக முதல்வருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புத்தகம் வழங்கினார். அதேபோல், தமிழக ஆளுநருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகம் வழங்கினார்.