சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், விராம்பட்டிணம் போன்ற பகுதிகளிலும் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து, ஈரப்பதமான கடற்காற்று வீசுகிறது. இந்த காற்று, தென் மாநிலங்களில் சந்திப்பதால், தமிழகத்தில் பல இடங்களில், இன்று (மார்ச் 17) பரவலாக மழை பெய்யலாம் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.