Tamilisai Soundararajan

Advertisment

புதுச்சேரி வனத்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கிருந்தபாம்பு, மயில் உள்ளிட்ட உயிரினங்களை கையில் எடுத்துக் கொஞ்சிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி - கடலூர் சாலையில் செயல்பட்டு வரும் வனவிலங்கு இயக்குநரகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மயில், பாம்பு உள்ளிட்ட உயிரினங்களைக் கையில் எடுத்து, அவற்றுடன் கொஞ்சிப்பேசினார். பின்னர், அவற்றுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.