அண்மையில் தமிழில் ஊர் பெயரில் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. உதாரணமாக எக்மோர் என்பதை எழும்பூர் என எழுதவும், உச்சரிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த அரசாணையை வாபஸ் பெறுவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டபின் புதிய அரசாணை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
32 குழுக்கள் அமைக்கப்பட்டு பரிந்துரை பெறப்பட்ட பிறகு ஊர் பெயரில் ஆங்கில உச்சரிப்பு குறித்த அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த அரசாணை வாபஸ் பெறப்பட்ட நிலையில், நிபுணர்களை வைத்து ஆங்கில உச்சரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகு மீண்டும் அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்.