
தமிழ்மொழி இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக மாற்றதமிழக அரசு பாடுபடும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தி குறிப்பில். ''தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழியாக மாற்ற திமுக அரசு பாடுபடும். செம்மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்க எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு தொடர்ந்து உழைக்கும். கலைஞரின் மொழி, இனப் போராட்ட வரலாற்றின் சாதனைகளில் ஒன்று தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைத்தது. கல்வெட்டு காலம் முதல் கணினி காலம்வரை சிறப்புற்று விளங்கும் தமிழ்மொழிக்கு அணிகலன் செம்மொழி அந்தஸ்து'' என முதல்வர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)