Skip to main content

தமிழக போக்குவரத்து அமைச்சர் தம்பிக்கு 8 கோடி சொத்து!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

தமிழக அமைச்சரவையில் போக்குவரத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மிக முக்கியமான அமைச்சர். லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்துபட்டியலை, தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயம். இந்த நடைமுறையின் படி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். 

 

 Tamil Nadu Transport Minister brother have  Rs 8 crore asset

 

இதற்கான வேட்புமனு 3ஏ உறுதிமொழிபடிவம் தாக்கல் செய்ய வேண்டும். மாநில தேர்தல் ஆணயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் ஆண்டாங் கோவில் கிழக்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மனைவி சாந்தி போட்டியிடுகிறார். இவர் தனது கணவர் பெயரில் அசையும் சொத்து, அசையா சொத்துகள், வங்கி இருப்பு ரொக்கம் என மொத்தம் ரூபாய் 8 கோடியே 80 இலட்சத்து 84 ஆயிரத்து 30 ரூபாய் மதிப்பிலான  சொத்துகள் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரான விஜயபாஸ்கரின் சகோதர் 8 கோடி கணக்கு காட்டியிருப்பது கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்