Skip to main content

தமிழ்நாடு அஞ்சல்வட்ட உன்னத விருதுகள் வழங்கும் விழா! (படங்கள்)

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் மாநிலம் முழுவதும் அமைந்துள்ள 12,140 அஞ்சல் அலுவலகங்களின் வழியாக அஞ்சல், சிப்பம், பணம் பரிமாற்றம், வங்கி, காப்பீடு மற்றும் இதர சேவைகளை வழங்கிவருகிறது. வளர்ச்சி மற்றும் சவால்களை சந்திக்க அஞ்சல் சேவைகள் அவ்வப்போது  மேம்படுத்தப்படுகின்றன. 2020 - 21ஆம் ஆண்டில் தமிழக தபால் துறை ரூ. 1075 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. 

 

தொழில்நுட்ப வளர்ச்சியிலும், வருவாய் ஈட்டுவதிலும் தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்திய அளவில் முன்னோடியாக இருக்கிறது. அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடின் மூலம் 872 கோடி பிரீமியத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 6.20 லட்சம் அஞ்சல் ஆயுள் காப்பீடுகளும் 38.40 லட்சம் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளும் உள்ளன. தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவிட் 19 தொற்று பேரிடர் சமயத்திலும், ஒவ்வொருவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருந்தபோதும் வீட்டு வாசலுக்குச் சென்று அத்தியாவசிய அஞ்சல் சேவையை வழங்கினர். 

 

இவர்தம் சேவைகளை அங்கீகரிக்கும் பொருட்டு தமிழ்நாடு அஞ்சல் வட்டம் இந்த விருதுகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 97 விருதுகள் மற்றும் கேடயங்கள் சென்னை எழும்பூரில் உள்ள அம்பாசிடர் பல்லவா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினர் ஷம்பு கல்லோலிகர், முதன்மைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஆகியோரால் வழங்கப்பட்டன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
suspended of headmaster who won the award

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த போது அப்பகுதி மாணவர்களுக்கு சத்துக்குறைபாடு உள்ளதாக மருத்துவர்கள் சொன்னதன்பேரில் அமெரிக்காவில் பணியில் உள்ள இளைஞர்களின் 'ஒரு நாளைக்கு ஒரு டாலர்' திட்டத்தின் கீழ் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுகந்தியை அழைத்து தொடங்கினார். சிறிது காலத்தில் திட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் சில பள்ளிகளுக்கு சில பணிகளையும் செய்துள்ளார்.

இந்த நிலையில் மாநில நல்லாசிரியர் விருது பெற்று 2010 ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதும் பெற்றார். அதன் பிறகு பனங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராக பணி செய்து கடந்த 2022 ஜனவரி 27 ந் தேதி நிர்வாக மாறுதலில் ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராக ஜனவரி 31 வரை பணியில் உள்ளார்.

இந்த நிலையில் தான் தலைமை ஆசிரியர் கருப்பையன் 2015 ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி வடகாடு கிளையில் கடன் பெற்று திரும்பச் செலுத்தவில்லை என்று வங்கி மேலாளர், திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்த நிலையில் இது பற்றிய விசாரணையில் வங்கியில் கடன் பெற கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டது என்றும் போலி முத்திரைகள், உயர் அதிகாரிகளின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும் பள்ளியில் புரவலர் நிதியை சரியாக கையாளவில்லை என்றும் எழுந்த பல புகார்கள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்ட போது விளக்கமளிக்கவில்லை என்ற நிலையில் குற்றச்சாட்டுகள் குறித்து அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) சண்முகம் முன் கடந்த 22 ந் தேதி நேரில் விசாரணைக்கு சென்றும் சரியான விளக்கம் கிடைக்கப் பெறாததால், கருப்பையனை, மாவட்டக் கல்வி அலுவலர் பிப்ரவரி 2 ந் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

suspended of headmaster who won the award

பணியிடைநீக்க உத்தரவை தலைமை ஆசிரியர் கருப்பையன் வாங்காததால் வருவாய்த் துறையினர், கல்வித்துறை அலுவலர்கள் பள்ளி சுவற்றில் ஒட்டிச் சென்றுள்ளனர். தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் கருப்பையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

2023 ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது; தமிழக அரசு அறிவிப்பு

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
 Tamil Nadu Government Notification for ilakkiyamamani Award for the year 2023

மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கிய மாமணி விருது தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான இலக்கியமாமணி விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு. சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாகப் பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. 

அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியமாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப் பெறுவார்கள். இலக்கியமாமணி விருது 2022 ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க. இராமலிங்கம் (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொ.மா.கோதண்டம் (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

 Tamil Nadu Government Notification for ilakkiyamamani Award for the year 2023

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணி அர்ஜீணன் (மரபுத்தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர. திருவிடம் (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த க. பூரணச்சந்திரன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டிற்கு இலக்கியமாமணி விருதிற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஞா. மாணிக்கவாசகன் (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகசுந்தரம் (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) ச. நடராசன் (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.