Tamil Nadu Legislative Assembly adjourned without specifying a date!

Advertisment

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரைதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு. ஆகஸ்ட் 13அன்று தமிழ்நாடு பட்ஜெட்டும், ஆகஸ்ட் 14அன்று வேளாண் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 23 நாட்கள் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (13/09/2021) மட்டும் சுமார் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.