Tamil Nadu govt order for 24 IPS Officers transfer 

Advertisment

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 14 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 24 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் இன்று (08.08.2024) உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “திருப்பத்தூர் மாவட்ட எஸ்பியாக ஸ்ரேயா குப்தா, சேலம் மாவட்ட எஸ்பியாக கவுதம் கோயல், நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பியாக அருண் கபிலன், கரூர் மாவட்ட எஸ்பியாக பெரோஸ் கான், விருதுநகர் மாவட்ட எஸ்பியாக கண்ணன், மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியாக ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக ஆல்பர்ட் ஜான், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக ஆதர்ஷ் பச்சேரா நீலகிரி மாவட்ட எஸ்பியாக நிஷா, கோயம்புத்தூர் மாவட்ட எஸ்பியாக கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட எஸ்பியாக மதிவாணன், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக பிரபாகர், தருமபுரி மாவட்ட எஸ்பியாக மகேஷ்வரன், தென்காசி மாவட்ட எஸ்பியாக ஸ்ரீனிவாசன், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக செல்வ நாகரத்தினம், சென்னை காவல்துறை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையர் சுஜித் குமார், சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக ஹரிஹர பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.