Tamil Nadu Governor pays surprise visit to Delhi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

நாளை சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் இந்த திடீர் பயணம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சகத்திலிருந்து வந்த அவசர அழைப்பின் பெயரில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றிருப்பதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று கோயம்புத்தூர் சென்று அங்கிருந்து நாளை காலை சேலம் சென்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்துசெய்துவிட்டுதமிழக ஆளுநரின் இந்த திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திடீர் பயணத்துக்கு காரணங்களாக சொல்லப்படுவது, நாகலாந்தில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஆர்.என்.ரவி ஏற்கனவே நாகாலாந்தின் ஆளுனராக இருந்துள்ளார். அதேபோல் இவர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியாகவும் இருந்துள்ளார். இது குறித்து கலந்தாலோசிக்க இந்த திடீர் பயணம் என்று தெரிகிறது. ஆனால் பயணத்திற்கான காரணம்உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே உள்ளது.

Advertisment