அனைத்து ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினம், உலக தண்ணீர் தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி தினம் உள்ளிட்ட6 முக்கிய தினங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம்நடத்தப்படுகிறது.
அந்த வகையில், ஊரக வளர்ச்சி இயக்குநர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடத்தை பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.