/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fishermeni_1.jpg)
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்கடை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை, இலங்கை தெற்கு மன்னார் அருகே வைத்து மீனவர்களை கைது செய்தது.
கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை முடிந்த பின் மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)