Tamil Nadu Chief Minister inspects government bus

Advertisment

சென்னை மாநகரப் பேருந்தில்தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென சென்னை மாநகரப் பேருந்தில் ஏறிய தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின், பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அந்தப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணிகளிடம் மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவிற்கு இருக்கிறது என்பது பற்றிகேட்டறிந்தார். எதிர்பாராத இந்த நிகழ்வால் ஆச்சரியமடைந்த மக்கள், முதல்வரிடம் மகிழ்ச்சியாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இதற்கு முன்னதாக கண்ணகி நகரில் நடைபெற்று வரும்மெகா தடுப்பூசி முகாமிற்கு விசிட் அடித்த முதல்வர், அங்கும் ஆய்வுகள் மேற்கொண்டார்.