தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதியதாகத் தொழில் தொடங்க உள்ள நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்கான முன்னேற்பாட்டுச் செயல்பாடுகள், கலைஞர் நூற்றாண்டு விழாவில் புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
மேலும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள், தமிழக ஆளுநர் ஆர்.ரவியின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக அமைச்சர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதற்குக் கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இது குறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.