2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கான திட்டங்கள் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி வாக்குறுதிகளில் ஒன்றான மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறுமா என்ற ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.