Skip to main content

கட்டுப்பாட்டை இழந்த பஸ்; மரத்தடியில் ஒதுங்கிய காவலருக்கு நேர்ந்த துயரம்

 

tambaram maduravoyal bypass police and government bus incident 

 

தாம்பரத்தில் போலீஸ் ஒருவர் மீது பேருந்து மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 29). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம்போல் தனது வீட்டில் இருந்து பணிக்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வழியில் மழை பெய்ததால் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையின் ஓரத்தில் உள்ள மரத்தடியில் மழைக்கு ஒதுக்கியுள்ளார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி இருந்த  நாகராஜன் மீது மோதி அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது.

 

இதில் படுகாயம் அடைந்த காவலர் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானர். இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் காளிதாஸ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மழைக்காக சாலை ஓரத்தில் ஒதுங்கி நின்றவர் மீது பேருந்து மோதி பலியான சம்பவம் பொதுமக்கள் மத்திலும், காவல்துறையினர் மத்திலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !