Published on 15/08/2019 | Edited on 15/08/2019
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
![surya and karthi helps for kerala and karnataka flood](http://image.nakkheeran.in/cdn/farfuture/WYmy-num9xBl_R8H7xqKc_bjTt4ZTS_k2-dDtWQP-Qk/1565866091/sites/default/files/inline-images/suryas.jpg)
இந்த இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து சுமார் 7 லட்சம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களின் நிவாரண பணிகளுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் ரூ.10 லட்சம் நிதியுதவியளித்துள்ளனர்.