திருச்சி கே. கே. நகர் அருகே ஓலையூரில் ஸ்டாலின் புஷ்பராஜ் என்ற ரஜினி ரசிகர், ரஜினியின் பெற்றோர்கள் ராம் பாய் ஆகியோருக்கு தனக்கு சொந்தமான இடத்தில் சொந்த செலவில் மணிமண்டபம் கட்டியுள்ளார். இதனை ரஜினிகாந்தின் சகோதரர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். இதனையடுத்து மணிமண்டபத்தை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ரஜினி ரசிகர்கள் நேரில் வந்து பார்வையிட்டு சிலைகளுக்கு மாலை சூட்டி வணங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் துணைத்தலைவருமான செனட்டர் டத்தோ டி.மோகன் தனது குடும்பத்தினருடன் இந்த மணிமண்டபத்திற்கு வருகை தந்து ரஜினியின் பெற்றோர் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இங்கு வருகை புரிந்தமை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு தமிழகம் மட்டுமின்றி மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர். ரஜினியின் தீவிர ரசிகர் ஸ்டாலின் புஷ்பராஜின் இந்த அவரின் உன்னத பாசத்திற்கு எடுத்துக்காட்டாய் இந்த மணிமண்டபம் அமைந்துள்ளது என்றார்.
ரஜினி நேரடி அரசியலுக்கு இதுநாள் வரவில்லையே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அரசியலுக்கு வருவது ரஜினிகாந்தின் தனிப்பட்ட விருப்பம் இது குறித்து நான் கருத்து சொல்வது நல்லதல்ல என்றார்.
இந்தப் பேட்டியின் போது இந்த மணிமண்டபத்தை நிறுவிய ஸ்டாலின் புஷ்பராஜ், பால நமசிவாயம். ரமேஷ் கராத்தே செழியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.