Skip to main content

கோடைவெயிலின் கோரப்பிடியில் கோடியக்கரை:தண்ணீருக்கு ஏங்கும் விலங்குகள்!

Published on 12/05/2019 | Edited on 14/05/2019

கோடைவெயிலின் தாக்கம் கோடியக்கரை வனவிலங்குகளையும் விட்டுவைத்திடவில்லை. வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து, வனவிலங்குகள் தண்ணீருக்காக அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது.

 

The summer that does not leave the Kotakakar wildlife

 

நாகை மாவட்டம், வங்ககடலோரம் உள்ள வேதாரன்யம் கோடியக்கரையில் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசுமைமாறா காடுகள் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், குரங்கு குதிரை, உடும்பு, மயில், காட்டுப்பன்றி என பல்வேறு வனவிலங்குகள் இருக்கின்றன. அங்கு தற்போது கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலையே உறுவாகியுள்ளது. இந்த சரணாலயத்தில் 56 இடங்களில் இயற்கையான குளங்களும், சிமெண்டால் செயற்கையாக 17 இடங்களில் கட்டப்பட்ட தொட்டிகளும் உள்ளன. இருந்தபோதிலும் வனத்துறை அதிகாரிகள் கடமைக்கும், கணக்கிற்கும் தினசரி ஒரு டேங்கர் தண்ணீர் கொண்டுவந்து தொட்டிகளில் விடுகின்றனர்.

 

The summer that does not leave the Kodiyakkarai wildlife

 

இதுகுறித்து கோடியக்கரை சமுக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், " வழக்கமாக இந்த காட்டுப் பகுதியில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 120 சென்டிமீட்டர் மழை பெய்யும். ஆனால் சென்ற ஆண்டைவிட மிக மிக குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் தற்போது குளங்கள் வறண்டுவிட்டன. வழக்கமாக கத்திரி வெயில் சீசன் சமயங்களில் தான் வனப் பகுதியில் உள்ள குளங்கள் வறண்டுபோகும், ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக மழை குறைவு மற்றும் கடும் வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள நண்டு பள்ளம், அழுகண்ணி,  இரட்டை வாய்க்கால் நல்ல தண்ணீர் குளம், புதுக்குளம் உள்ளிட்ட 58 குளங்களிலும் தரிசு பகுதிகளிலும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி கூடிவிட்டது.

 

The summer that does not leave the Kodiyakkarai wildlife

 

வனத்துறையின் மூலம் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றினாலும் அது வனவிலங்குகளுக்கு போதுமானதாக இல்லை. மழை பெய்தால்தான் வன விலங்குகள் சரணாலயம் பொலிவு பெறும். அதோடு கஜாபுயலின் கோரதாண்டவத்தால் காடுகளில் இருந்த மரங்களும் முறிந்து சிதிலமடைந்து, ஈரத்தன்மையை இழந்து நிற்கின்றன. புயலுக்கு பிறகு மழையே பொழியல, கோடை மழையும் பெய்யல, அதனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது, வாய்பேசும் மனிதனே தவிக்கும் நிலமையை யாரும் கண்டுக்கல, வாயில்லா காட்டு விலங்குகளுக்கா முக்கியத்தும் கொடுப்பாங்க. அரசு முன்வந்து அனைத்து குளங்களையும் தண்ணீர் நிறப்பனும்," என்கிறார்.

 

 

கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் ஆனால் இந்த ஆண்டு கடும் வெப்பத்தினால் சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.