



Published on 24/03/2022 | Edited on 24/03/2022
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பேசிய அவர்கள், ’கரும்பு ஒரு டன்னுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்க வேண்டும். கூட்டுறவு ஆலைகளை திறந்திட வேண்டும். தனியார் ஆலைகள் தர வேண்டிய கரும்பு பணம் பாக்கியை பெற்றுத் தர வேண்டும்’ என பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தனர்.