சென்னை கொரட்டூரில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கொரட்டூர் பட்டரவாக்கம் சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கியிருந்த போது சிறிது சிறிதாகபள்ளம் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் கொரட்டூர் பட்டரவாக்கம் சாலையின் நடுவே ஒரு ஆள் அடிக்கு பள்ளம் விழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவலர்கள் பள்ளத்தை சுற்றிதடுப்புகளை அமைத்து வாகனங்களை வேறு வழியில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பள்ளம் ஏற்பட என்ன காரணம்? இதே போன்று வேறு எங்கு பள்ளம் ஏற்படும் நிலை உள்ளதா என்றும் ஆராய்ந்து வருகின்றனர்.