Skip to main content

சாலை, வீடுகளில் ஏற்பட்ட திடீர் விரிசல் - அச்சத்தில் கோக்குடல் மக்கள்

Published on 22/11/2022 | Edited on 22/11/2022

 

Sudden cracks in the houses-Kokudal people in fear


 

உதகை அருகே பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏற்பட்ட திடீர் விரிசல் அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கடநாடு ஊராட்சிக்கு உட்பட்டது கோக்குடல் கிராமம். இந்த கிராமத்தில் திடீரென பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சாலையிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நில அதிர்வு காரணமாக இப்படி ஏற்பட்டுள்ளது என்று அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக புவியியல் துறைக்கு உடனடி தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரிசல் ஏற்பட்ட வீடுகளில் புவியியல் துறை இளம் நிலை அலுவலர் சரவணன் ஆய்வு செய்தார். அதன்பிறகு இது தொடர்பான அறிக்கையைப் புவியியல் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப உள்ளதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியான சுவர் விரிசல் படங்கள் வைரலாகி மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடநாடு வழக்கு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Koda Nadu case report handed over to the court

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

 

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரிடம் இருந்து 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளை ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் ஆய்வின் முடிவில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மூடி முத்திரையிடப்பட்ட உறையில் உதகை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

குன்னூர், கோத்தகிரி தாலுக்கா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Holiday announcement for Coonoor, Kotagiri taluk schools

 

தொடர் கனமழை காரணமாகப் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி, குன்னூர் ஆகிய 2 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (24.11.2023) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.