Skip to main content

வழிவிடச் சொன்னவரைக் கூட்டாகத் தாக்கிய கல்லூரி மாணவர்கள்; அம்பத்தூரில் பரபரப்பு

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Students who collectively assaulted those who asked them to leave; Busy in Ambattur

 

சென்னை அம்பத்தூரில் தனியார் கல்லூரி மாணவர்கள், நபர் ஒருவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

 

சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு கருக்கு பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இக்கல்லூரியில் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அக்கல்லூரியில் பயின்று வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலில் நின்றுகொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்களிடம் போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சாலையில் நின்று கொண்டிருந்த மாணவர்களை ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து அசோக்கை தாக்கினர்.

 

ஏற்கனவே ஆஞ்சியோ சிகிச்சைபெற்று இருந்த அசோக்கை போலீசார் முன்னிலையில் மாணவர்கள் தாக்கும் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளான அசோக் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பந்தமாக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, முதற்கட்டமாக 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுவன் கடத்தல் சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Kidnapping incident; Ex-wife of IAS

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் இருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார் தற்போது குஜராத்துக்கு விரைந்துள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Next Story

கல்வராயன் மலையில் ட்ரோன் விட்டு சோதனை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024

 

  kallakurichi incident; Drone test on kalvarayan Hill

அண்மையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரமருந்திய 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமையில் திடீர்  ஆய்வு நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் மாற்றப்பட்டிருந்தார்கள் குறிப்பாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் இங்கு நியமிக்கப்பட்டிருந்தார். சட்ட ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளை முடுக்கிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேரில் சென்று கல்வராயன் மலைப் பகுதிக்கு சென்றுள்ள ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கல்வராயன் மலை, கரியாலூர், வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்திய நிலையில் சேராப்பட்டு பகுதியில் டிரோன்களை பார்க்க விட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இனி கல்வராயன் மலைப்பகுதியில் இது போன்ற கள்ளச்சாராயம் காய்ச்சும் நடவடிக்கைகளோ அல்லது வேறு தவறான நடவடிக்கைகளோ நிகழாத வண்ணம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்த போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.