Skip to main content

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழந்த பரிதாபம்

Published on 20/07/2023 | Edited on 20/07/2023

 

Student passes away in perambalur who in school class room

 

பெரம்பலூர் மாவட்டம், பாடலூர் அருகே உள்ள டீ களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மகவீன்(16). இவர், அருகில் உள்ள தேனூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, மாணவன் மகவீன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். 

 

இதனைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கதறி அழுதனர். 

 

இது குறித்து பாடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் மகவீன், கடந்த ஓராண்டாகவே இதய நோய் சம்பந்தமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், அவர் இதய நோய் பாதிப்பினால் திடீரென உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“அதிநவீன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது” - முதல்வர்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Delighted to launch state-of-the-art manufacturing program” Chief Minister

 

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்கா அமைந்துள்ளது. தற்போது இங்கு நிறுவப்பட்டுள்ள ஜேஆர் ஒன் என்ற காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.11.2023) திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பெரம்பலூர் மாவட்டத்தில், இவ்வளவு சிறப்பான திட்டத்திற்கான திறப்பு விழா நடைபெறுகிறது. பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி. சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளிக்கின்ற வகையில், இந்தத் திட்டத்திற்கான திறப்பு விழா இன்றைக்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

 

இன்றைக்கு, முதற்கட்டமாக, 400 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கோத்தாரி குழுமத்தைச் சார்ந்த ஜேஆர் ஒன் கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலை துவக்கி வைக்கப்படுகிறது. 2028-ஆம் ஆண்டுக்குள், கோத்தாரி ஃபீனிக்ஸ் நிறுவனம், மேலும் 2,440 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 29 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்று விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. இவை எல்லாம் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

 

Delighted to launch state-of-the-art manufacturing program” Chief Minister

 

இதற்கெல்லாம் மணிமகுடமாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த இருக்கிறோம். இது போன்ற நிறுவனங்களோடு சேர்ந்துதான் இந்த மாநாட்டை நடத்த இருக்கிறோம். உலகம் முழுக்க இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே, ஃபீனிக்ஸ் கோத்தாரி நிறுவனம், இந்த அதிநவீன உற்பத்தித் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது மிக மகிழ்ச்சி அளிக்கிறது” எனப் பேசினார்.

 

Delighted to launch state-of-the-art manufacturing program” Chief Minister

 

இவ்விழாவில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்  எம். பிரபாகரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய்,  தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என கலந்து கொண்டனர். 400 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை மூலம் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மீண்டும் அரங்கேறிய கொடூரம்; மாணவனைத் தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்!

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

gang beaten a class 12 student and urinated on his face

 

12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்கி அவரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள மருத்துவ காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் ஒருவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக அடித்து தாக்கியுள்ளது. மேலும் அந்த கும்பல் அந்த மாணவனின் முகத்தில் சிறுநீரையும் கழிக்கிறது. அந்த மாணவர் தன்னை விட்டுவிடுங்கள் என்று மன்றாடியும் அவர்கள் தொடர்ந்து தாக்குகின்றனர். இதனை நால்வரில் இரண்டு பேர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கின்றனர். 

 

இந்த நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது குறித்து மீரட் போலீசார் கூறுகையில், மாணவனை மர்ம கும்பல் தாக்கும் சம்பவம், கடந்த நவம்பர் 12 ஆம் தேதி  நடந்தது என்றும், அதில் சம்பந்தப்பட்ட அவி சர்மா, ஆஷிஷ் மாலிக், ராஜன் மற்றும் மோஹித் தாக்கூர் ஆகிய நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் ஆஷிஷ் மாலிக் என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அண்மையில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒருவர் தாக்கப்பட்டு முகத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்